என் அக்காகளின் மானத்தைத் தின்ற நீ
எப்படி விடுமுறைக்கு வீடு செல்கிறாய்?
உன் கண்களுக்கு பயந்து
உன் அம்மாவும் தங்கையும் ஓடி ஒளியமாட்டார்களா?
உன் பூட்ஸ்ரேகையில்
இத்தனை தசைப்பிண்டங்கள் சிக்கிக் கிடக்க
இந்த சம்பளத்தில்
எப்படி உன்னால் வாய் நனைக்க முடிகிறது?
உணர்ச்சி நரம்பை
அறுத்துவிட்டு தான்
இணைப்பார்களோ ராணுவத்தில்?
இது தான் உங்கள் புத்தன் போதித்த புத்தாமோ?
இன்னும் நீ மனித முகத்துடன் இருப்பது
ஆச்சர்யம் தான்.....!
2 comments:
இந்த கவிதைக்கும் கீழே உள்ள கவிதைக்கும் சேர்த்து, வலிகள், வேதனைகள். உண்மைகள் இம்மூன்றும் உங்கள் கவிதை வரிகளில் பின்னி பிணைந்திருக்கின்றன - இந்த வயதில் இது கொஞ்சம் அதிகம் தான் பழயதை மறக்க முயலுங்கள் நிகழ் காலத்தை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள் இயற்கை, அழகு போன்றவற்றைப் பற்றி கவிதை எழுதுங்கள்.
வேதனைக்களையும் நான் ரசிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்.... ஓவொன்றும் ஒவொரு விதமான அனுபவம்...
இருத்தும் முயற்சி செய்கிறேன் ....
Post a Comment