thamizhini

Mar 31, 2010














கோயிலில் திருட்டு
தங்கமுலாம் பூசிய
கடவுள்
திருடனுடன் தப்பியோட்டம்...

Mar 30, 2010




















பாலும் பழமும் கோயிலுக்கு
கடவுள்களோ
கஞ்சியுடன்
முதியோர் இல்லத்தில். 
















தீயதைப் பார்க்காதே
தீயதைப் பேசாதே
தீயதைக் கேட்காதே
என்றார்கள்
அன்றிலிருந்து இன்றுவரை
ஊனமாகத்தான்
வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.




















ஓடியாட மைதானமுண்டு
கற்றுத்தேற பல்கலையுண்டு 
படுத்துறங்க புல்வெளிக்களுமுண்டு
இவற்றைச் செய்ய 
சுதந்திரமில்லை எமக்கு..

















சுற்றிச் சுற்றிப் பார்த்தேன்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும்
கல்லறைகள் தான்.
எம் ஊர் 
தொலைந்து போயிருந்தது....  














நேற்று நடந்த ஷெல்வீச்சில்
தன் சோதரன் தலைதெறித்த
செய்தி கேட்டு
என் மடியில் கதறி அழுகிறது
இந்த தெருவோர மரநிழல்.













ஓசோன் படையை விட்டுவிடுங்கள்.
முதலில்
துப்பாக்கி முனைத்துவாரத்தை
அடையுங்கள்.
பூமி தொடர்ந்து சுவாசிக்கும்...















அங்கு 
மரங்களில் பூக்கள் இல்லை.
வீதிகளில் மனிதர் இல்லை.
இரண்டுமே
கல்லறைகளில்.....















ஏதும் ஒரு அடகுக்கடை
காட்டுங்களேன்.
எம் உயிர் பத்திரமான
பத்திரமாக ஆவது இருக்கட்டும்.




















பாலை விட
எம் கண்ணீரென்ன 
அவ்வளவு  இனிதா 
இன்னும்
உங்களுக்குப் புளிக்கவில்லையே!














பலரின் எதிர்காலங்கள் 
கொள்ளையடித்துச்  செல்லப்படுகிறது...
'காலம் பொன்னானது'
என்று 
சும்மாவா சொன்னார்கள்????  





















உயிரை எடுத்துக்கொண்டு
ஓடி வந்துவிட்டேன்.... 
உரிமையை
அநாதையாக்கி விட்டு.















உலகிலே
அதிக கட்டிடங்கள்
எங்கள் ஊரிலுள்ள
மயாணத்தில் தான்...

Mar 29, 2010





















அம்மா!
இந்த சினிமாவில்
மட்டும் தான்
கிரோக்கள்  ஜெயிபாங்களா?











இத்தனைக்குப் பிறகும்
"அமைதியாய் இரு
எல்லாத்துக்கும் கடவுள் இருக்கிறார்" 
என்று
பாட்டி சொல்கிறாள்.
அவளுக்கு அவள் பாட்டி
சொன்னதாம்?????

















எம் மண்ணைப் போல்
என் மானத்தையும் பந்தாடுங்கள்.
"நான் உங்கள் சகோதரி" என்று கதறலாம்
பொருட்படுத்த வேண்டியதே இல்லை.

ஐயோ! அப்படி எல்லாம் உற்றுப் பார்க்காதீர்கள்
நெற்றியில் ஒரு பொட்டிடுங்கள்
உங்கள் துப்பாக்கி முனையால்.....
உடல் உண்பவர்கள் தானே நீங்கள்!

எறும்புகள் மொய்க்கிறதே
உங்கள் நகங்கள் என் உடலில்
கோலங்களோ போட்டுள்ளன?

தேடி என் தாய் வரலாம்
அந்த ஒரு சேலை தான் அவளிடம்
அதையும் உருவி விடாதிர்கள்..

என் உடலை எந்த மரத்துக்கும்
உரமாக்க வேண்டாம்...
எரிந்து சாம்பலாகி விடும்.

பயப்பிட வேண்டாம்
உங்களுக்கு ஒன்றுமே தெரியாது
இது உங்கள் நீதிமன்றம்.

சரி தயாராக இருங்கள்
இதோ
உங்கள் சோதனைச்சாவடியை
நெருங்கி  வந்து கொண்டிருக்கிறேன்........
எம் உடலுக்குச் சுதந்திரமாம்
அவிழ்த்தெறியப்பட்டன  உடைகள்.
எம் உயிர் எமக்கு சுமையாம் 
துப்பாக்கிகள் தயார்ப்படுத்தப்பட்டன.
எம் விழி வெப்பத்தைக்கூட
ஏற்கத் தைரியமில்லா கோழைகள்  
கட்டிவிட்டனர் கண்களையும்.
ஒரு கணம் கூடப் பயம் வேண்டாம்
"சித்தரிக்கப்பட்ட நாடகம்" என்று சொல்......
ஊனம் போர்த்திய உலகமடா இது!
எமக்கு மேல் மேடை போடு
அழகிப் போட்டிக்கு ஆள் அனுப்பி ரசிக்கும்
அயல் நாடு.
ஆம் கதறி அழுவது என் தங்கை தான்
இப்பொழுதெல்லாம் அவள் பங்கிறைச்சி  போல்
பிரிக்கப்பட்டிருப்பாள்.
அவசரம் வேண்டாம்
அதையும் திரையிட்டு காட்டுவார்கள்
பார்த்து மகிழுங்கள்.....