thamizhini

Sep 3, 2008

பிழைக்க வந்துள்ளேன்




கண்விழித்துக் கண்ணாடியில்
என்னைக் கண்டதும்
ஒரு பெருமூச்சு
அங்கு மரங்களில் பூக்கள் இல்லை
வீதிகளில் மனிதரில்லை
இரண்டுமே கல்லறைகளில்

கட்சிக் கொடிகளுக்குள்
சிக்கிச் சின்னாபின்னமான
இந்த வாழ்க்கையை சுமந்துகொண்டு
எவ்வளவு தூரம் தான் நகர்வது?
இரத்த வாடையை தொடர்ந்து
நுகர மறுக்கும் இந்த வாழ்க்கையையும்
என் கடமைகளையும்
கடல்கடந்து கூட்டிவருவதை விட
வேறு வழி தெரியவில்லை
உயிரை எடுத்துக்கொண்டு
ஓடி வந்து விட்டேன்
உரிமையை அநாதையாக்கிவிட்டு

வணிகக்காரர்கள் தான் பாவம்
அவர்கள் வரவுசெலவில்
என்னை அறவிடமுடியாக் கணக்கில்
பதிந்திருப்பார்கள்.


------------------------------------------

2 comments:

சித்தாந்தன் said...

"கண்விழித்துக் கண்ணாடியில்
என்னைக் கண்டதும்
ஒரு பெருமூச்சு
அங்கு மரங்களில் பூக்கள் இல்லை
வீதிகளில் மனிதரில்லை
இரண்டுமே கல்லறைகளில்"

மனதை குடையும் வரிகள் .எமது வாழ்வின் துயர்மிக்க் கணங்களை கண்முன்னே கொண்டுவருகின்றன. தொடர்ந்து எழுதுங்கள்

தமிழினி said...

நன்றி அண்ணா....
கண்டிப்பாக எழுதுவேன்.......